சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் சர்வதேச பழங்குடியினர் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
இதில் பழங்குடியினர் பெண்கள் மேளதாளத்துடன் ஆடி பாடி பங்கேற்றனர். இதனையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு நடந்தது. இதற்கு கும்மிடிப்பூண்டி எம்.ஏல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழுத் துணை தலைவர் மாலதி குணசேகரன், ஆதிவாசி இருளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் முனுசாமி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான விருந்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்றனர்.