சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினம்
சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினம்
உடுமலை,
உடுமலை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினத்தையொட்டி, மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விபத்தில் அடிபட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது தற்போது பருவமழை என்பதால் மழை தீவிரமடையும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.
உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ப.கோபால், மூத்த தீயணைப்பாளர் தாமோதரன் ஆகியோர் செய்முறை விளக்கமளித்தனர். நிகழ்ச்சிக்கு தாசில்தார் கண்ணாமணி, தேர்தல் துணை தாசில்தார் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதே போன்று மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்திலும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.