பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா இன்றுடன் நிறைவு
பொள்ளாச்சியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.;
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் நடைபெறும் இந்த பலூன் திருவிழா, கொரோனா பேரிடர் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, ராட்சத வெப்ப காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
இன்றுடன் பலூன் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்த பலூன் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று, ராட்சத பலூன்களை பார்த்து மகிழ்ந்தனர்.