உள்கட்சி தேர்தல்: ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு

உள்கட்சி தேர்தல்: ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு -துரை வைகோ முதன்மை செயலாளர் ஆனார்.

Update: 2023-06-02 21:41 GMT

சென்னை,

ம.தி.மு.க. 5-வது உள்கட்சி தேர்தல் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வைகோ மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது மகனும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ முதன்மை செயலாளர் பதவிக்கு வேட்புமனு அளித்தார்.

இந்த பதவிகளுக்கு 2 பேரை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே 5-வது முறையாக ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ தேர்வாகிறார். துரை வைகோ முதன்மை செயலாளர் ஆகிறார்.

ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வைகோ, துரை வைகோ முறைப்படி கட்சி பதவியை ஏற்பார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளராக மீண்டும் பதவி ஏற்க உள்ள வைகோவுக்கும், முதன்மை செயலாளராக பதவி ஏற்க உள்ள துரை வைகோவுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்