விளையாட்டு மீதான ஆர்வம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

விளையாட்டு மீதான ஆர்வம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

Update: 2023-09-02 18:45 GMT

நன்னிலம்:

விளையாட்டு மீதான ஆர்வம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

விளையாட்டு போட்டிகள்

பேரளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பரிசு வழங்கினார். விழாவில் பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

விழாவில் கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது:-

உலக அளவிலான போட்டிகள் தமிழகத்தில் நடப்பதால் விளையாட்டு போட்டிகள் மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சவளக்காரன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றனர்.

போட்டிகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் கலங்காமல் இடைவிடாது உழைத்து, இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மாணவர்களுக்கு ஆரோக்கியம் மிக அவசியம். விளையாட்டு மீதான ஆர்வம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசு

விழாவில் கால்பந்து, ஆக்கி, வலைப்பந்து, கைப்பந்து, கோ-கோ, கபடி, பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், கேரம், தடகளம் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இந்திரா மற்றும் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்