பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது.

Update: 2023-01-03 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது.

கால்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான செவாலியர் சி.ஐ.ஆர்.மச்சாது நூற்றாண்டு சுழற் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

போட்டி தொடக்க விழாவில் தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி கால்பந்து கழக தலைவர் சேசையா வில்லவராயர், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக செயலாளர் லூர்து பிரிஸ், செவாலியர் சி.ஐ.ஆர்.மச்சாதுவின் மகன்கள் ஆர்.அன்டோ மச்சாது, ஆர்.ஹாட்லி மச்சாது ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

வெற்றி

இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 14 பள்ளிக்கூடங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு உள்ளன. இதில் நேற்று மாலையில் நடந்த முதல் போட்டியில் தூத்துக்குடி லசால் பள்ளி அணியும், புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடின. இதில் புனித லசால் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து வருகிற 6-ந் தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்