கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

திருவாரூர் சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

Update: 2023-03-15 18:45 GMT


திருவாரூர் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வினாடி -வினா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு இடையே இறுதி வினாடி -வினா போட்டி திருவாரூர் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று நடத்தியது. நிகழ்ச்சிக்கு சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் திருவாரூர் கிளை மேலாளர் சூரிய நாராயணன் தலைமை தாங்கினார். மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஸ்ரீவித்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மைய தலைவர் அண்ணாதுரை, துணைத்தலைவர் அழகிரிசாமி, நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா மற்றும் திரு.வி. க .அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். முதல்பரிசாக ரூ.10ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது மற்றும் நான்காவது பரிசாக தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. இதில் முதல் மற்றும் 2-வது பரிசுகளை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வென்றனர். 3-வது பரிசை நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ ,மாணவிகளும்,4-வது பரிசை திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் பெற்றனர். நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகளை எழுதும் மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.பயிற்சியாளர் ஓவியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்