கோவில்பட்டியில்கல்லூரிகளுக்குஇடையேயான ஹாக்கி போட்டி

கோவில்பட்டியில்கல்லூரிகளுக்குஇடையேயான ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

Update: 2022-10-13 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கிப்போட்டி கோவில்பட்டி கே. ஆர். நகர் கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில், நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி, ஜி. வி. என். கல்லூரி, எஸ். எஸ். டி. எம். கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி, எஸ்.டி. இந்து கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணிகள் கலந்து கொள்கின்றன. நாளைமறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை தலைவர் ஆறுமுகம், பல்கலைக்கழக விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரிவஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகின்றனர்.

போட்டி ஏற்பாடுகளை கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் கே. ஆர். அருணாச்சலம், முதல்வர் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குனர் ராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்