சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் திருவிழாவில் பங்கேற்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாதி திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மதுரை,
பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கவும் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பொன்னமராவதி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி சாதி திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.