தலையில் வெட்டு காயங்களுடன் கிடந்த நபருக்கு தீவிர சிகிச்சை

தலையில் வெட்டு காயங்களுடன் கிடந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-06-19 17:21 GMT
தலையில் வெட்டு காயங்களுடன் கிடந்த நபருக்கு தீவிர சிகிச்சை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நகராட்சி சொந்தமான குப்பை கிடங்கு அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த நபர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரை தாக்கி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்