தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.;
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாபர் மசூதி பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், பொன்னுச்சாமி, ஏட்டு தேவராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசார் பயணிகளின் உடைமைகள், ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ரெயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.