சிறுத்தை தாக்கி காயமடைந்த செந்நாய்க்கு தீவிர சிகிச்சை
கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கி காயமடைந்த செந்நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச்சரகம் அளக்கரை பிரிவு பகுதிக்கு உட்பட்ட அக்கால் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் செந்நாய் ஒன்று கழுத்தில் காயமடைந்தது. தகவல் அறிந்த கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனவர் ராமதாஸ், வனக்காப்பாளர்கள் நாகேஷ், மருதன் சிவக்குமார், வனக்காவலர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 1½ வயது மதிக்கத்தக்க பெண் செந்நாய் சிறுத்தை காயமடைந்ததை உறுதி செய்தனர். உடனடியாக அந்த செந்நாய்க்கு கால்நடை மருத்துவர் ராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து செந்நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்நாய் முழுமையாக குணமடைந்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.