சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி தீவிரம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-13 17:13 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரங்கள், மின்கம்பங்கள் காற்றின் தாக்குதலால் மிகவும் சேதமடைந்தன.

குறிப்பாக நெமிலி புன்னை கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த 7 மின்கம்பங்கள் தொடர்ச்சியாக அடியோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக மின்சேவை இல்லாமல் உள்ளது என்று கடந்த 11-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக உதவி மின்பொறியாளர் உலகநாதன், போர்மன் மகேந்திரன், லைன் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மின்வாரிய தொழிலாளர்கள் 12-க்கும் மேற்பட்டோர் சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்