நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக பாசனத்திற்காக நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் பகுதியில் நெல் நடவுக்காக நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் சில விவசாயிகள் எந்திர நடவிற்காக பாய் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.