குறுவை களை எடுப்பு பணி தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் குறுவை களை எடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2023-08-08 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் குறுவை நடவு பணி நடை பெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜுன் மாதம் 12-ந்் தேதி தமிழக முதல்-அமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளான சித்தமல்லி, பரப்பனாமேடு, மேலப்பூவனூர், காளாச்சேரி, ராயபுரம், ரிஷியூர்அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் தற்போது 34 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்கி குறுவை நடவு பணி மும்முரமாக நடந்து வருகிறது. முன் கூட்டியே தொடங்கப்பட்ட குறுவை நடவு சாகுபடியில் தற்போது களை எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விவசாயிகளில் சிலர் ஏற்கனவே 16,500 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி பணியை முடித்து குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்