ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊட்டியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
ஊட்டியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியது. இதற்கிடையே தென்மேற்கு பருவலை தீவிரம் அடைந்து உள்ள நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெயிலே அடிக்கவில்லை. பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு இடையே நாள் முழுவதும் சாரல் மலையும் அவ்வப்போது லேசாக கனமழையும் பெய்து வருகிறது. மஞ்சூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்களின் கடும் அவதி அடைந்துள்ளனர் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு வரும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வெளியே வருகின்றனர். தொடர் மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக வாகனங்களை ஓட்டி சென்றனர். ஆங்காங்கே சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே கன மழை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், 456 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு சவாரி நிறுத்தம்
தொடர்மழை காரணமாக நேற்று படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.இேதபோல் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஓளிரவிட்டபடி சென்றர். ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 13 டிகிரி செல்சியசும் பதிவானது.