காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

இடையக்கோட்டை வழியாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-04 19:30 GMT

கரூர் மாவட்டம் மாயனூர் என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதில் பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், எரியோடு, வேடசந்தூர், ஒட்டநாகம்பட்டி, காளாஞ்சிபட்டி வழியாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், 7 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.1,368 கோடி செலவில் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் சாலையோரங்களில் குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் வெரியப்பூர் பிரிவில் இருந்து வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி, சின்னக்காம்பட்டி, இடையக்கோட்டை வழியாக அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் கொண்டு செல்வதற்கு சாலையோரம் குழி தோண்டப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்