கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

பொள்ளாச்சியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால், தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. மேலும் வீடு, வீடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Update: 2022-06-29 13:36 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால், தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. மேலும் வீடு, வீடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர வீடு, வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதார பணிகள்

இந்த நிலையில் நெகமம் அடுத்த கொண்டேகவுண்டன்பாளையத்தில் 61 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நெகமம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர அவரது வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள பள்ளி வளாகம், அங்கன்வாடி மையம், நூலகம், பஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.

அறிவுரை

இதற்கிடையில் வாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து வாரப்பட்டி பகுதியில் செயல்படும் நூற்பாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களிடையே கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து வட்டார சுகாதார அதிகாரி டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்