வெள்ளத்தால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகிறது.
சென்னை,
சென்னை கன்னிகாபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை மற்றும் மிக்ஜம் புயல் தாக்கத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுகையில்,
சென்னையில் அனைத்து இடங்களிலும் மின் விநியோகம் சீராகி உள்ளது. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகிறது. மழை வெள்ளத்தால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும். நிவாரணத்தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.