டிராக்டர் மூலம் உழவு பணி தீவிரம்

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டிராக்டர் மூலம் உழவு பணி தீவிரம் அடைந்து உள்ளது.;

Update:2023-10-16 00:20 IST

முதுகுளத்தூர், 


உழவு பணி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவார்கள். அதுபோல் கடந்த ஆண்டு பருவமழை சீசனில் மழையே பெய்யாததால் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து விவசாயிகள் தற்போது விளைநிலங்களை சாகுபடிக்கு தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவுக்குட்பட்ட மட்டியாரேந்தல், தா ழியாரேந்தல், கருமல், தேரிருவேலி, பூசேரி, மைக்கேல் பட்டினம், பொசுக்குடி, கீழ சிறு போது உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விதை நெல் தூவும் பணி

அது போல் உழவு செய்ய விவசாய நிலங்களில் விதை நெல்களை தூவும் பணியிலும் விவசாயிகள் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் திரு உத்தரகோசமங்கை, களரி, ஆனைகுடி காவனூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் உழவு செய்து விதைநெல்களை தூவும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்