ஊருணியில் மேம்பாட்டு பணி தீவிரம்

ஊருணியில் மேம்பாட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2023-09-21 19:11 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள வானிச்சி ஊருணியை தூர்வாரி 4 கரைகளையும் பலப்படுத்தி கரை அரிப்பு ஏற்படாத வகையில் கற்கள் அடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஊருணியை கரை மேற்பரப்பில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஊருணி மேம்பாடு செய்யும் பணிகளை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகும். தினமும் ஏராளமான பொதுமக்கள் சாலைகளில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். சாலைகளில் நடந்து வருவதால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இவற்றை தவிர்க்க வேண்டும் என்ற வகையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்றவாறு வானிச்சி ஊருணியை மேம்பாடு செய்து பொதுமக்கள் இந்த கரையில் நடைபயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்