டெங்கு தடுப்பு பணி தீவிரம்

டெங்கு தடுப்பு பணி தீவிரம்

Update: 2022-10-15 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை பகுதியில் பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி ஊற்றும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, டெங்கு காய்ச்சலை தடுக்க தண்ணீர் தேங்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல், வாந்தி, தோலில் தடிப்புகள், உடல் வலி மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்