குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தல்

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.;

Update:2023-04-29 01:44 IST

அன்னவாசல்:

விழிப்புணர்வு கூட்டம்

அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் இலுப்பூர் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் குற்றச்சம்பவ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அன்னவாசல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி கலந்து கொண்டு பேசினார்.

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல்...

அவர் பேசுகையில், குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அவரவர் ஊராட்சி பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பாதுகாப்பு முறைகள் குறித்து அறிவுறுத்தினார். கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அனந்தமாறன் உள்ளிட்ட போலீசார் மற்றும் அன்னவாசல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்