சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்- போலீஸ்- பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு

சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்- போலீஸ்- பொதுமக்கள் கூட்டத்தில் முடிவு

Update: 2023-07-23 20:40 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சத்தியமங்கலம் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள்- போலீஸ் ஆலோசனை கூட்டம் நடைெபற்றது. கூட்டத்துக்கு போலீஸ் உதவி சூப்பிரண்டு ஐமன் ஜமால் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன் முன்னிலை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், 'குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது முக்கியம் ஆகும். இதனால் எளிதில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முதல் கட்டமாக சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பாலத்தில் இருந்து எஸ்.பி.எஸ். சந்திப்பு வரையிலும், எஸ்.பி.எஸ். சந்திப்பு முதல் அரியப்பம்பாளையம் வரையிலும், கோவை ரோட்டில் எஸ்.ஆர்.டி. சந்திப்பு வரையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றார்.

கூட்டத்தில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, அரியப்பம்பாளையம் தி.மு.க. பேரூர் கழக செயலாளர் வக்கீல் ஏ.எஸ்.செந்தில்நாதன், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.என்.ஜவகர், ரோட்டரி சங்க செயலாளர் சுந்தரம், அரிமா சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ வேன் டாக்சி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வரவேற்று பேசினார். முடிவில் தனிப்பிரிவு தலைமை ஏட்டு சதாசிவம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்