கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தொடக்கம்

திசையன்விளை பஜாரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

Update: 2023-04-01 18:45 GMT

திசையன்விளை:

திசையன்விளை பஜாரில் குற்ற செயல்களை தடுப்பதற்கு வசதியாக பஜார் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை திசையன்விளை போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. நகைக்கடை பஜாரில் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும், மற்ற பகுதியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கவிழா நேற்று நடந்தது. திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், நகை வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் முருகன், பொருளாளர் அய்யப்பன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், நகை கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அரிகரசுதன், திருவடி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்