புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி

பாளையங்கோட்டையில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி- அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2022-07-09 21:43 GMT

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 6, 7-வது வார்டுகளுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு, ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் இந்திராமணி, பவுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பவுத்த ஊழியர்கள், அதிகாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. சங்க பொதுச்செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தென் மண்டல அமைப்பு செயலாளர் குமரேசன், தென்மண்டல செயலாளர் முருகன், கோட்ட துணைத்தலைவர் ராஜன், செயல் தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்று பேசினார். மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட நலத்துறை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கேடயம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் கேடயம் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மூளிக்குளம் பிரபு, எல்.ஐ.சி. முதுநிலை கோட்ட மேலாளர் குமார், கோட்ட மேலாளர் கிருஷ்ணவேணி, வணிக மேலாளர் குமார், முன்னாள் கோட்ட மேலாளர் தங்கவேல்சிங், மத்திய மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் நடன சிகாமணி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுகுமாரன் காணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்