இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு
இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி பதவி உயர்வு பெற்று விழுப்புரம் பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டாகவும், களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தஞ்சாவூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டாகவும், நெல்லை சிறப்பு விசாரணைக் குழு இன்ஸ்பெக்டர் மனோகரன் நெல்லை சரக சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.