நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் கடைகளில் ஆய்வு

திருப்பத்தூரில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2023-05-09 20:04 GMT

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார், திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் திருப்பத்தூர், கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் மளிகை, பேக்கரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது 32 கடைகளில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 கடைகளில் பொருட்கள் தரம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் பொருட்களின் தரத்தை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்