உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
தரமற்ற உணவுகள் பரிமாறப்படுவதாகவும், சமையலறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு புகார் வந்தன. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா அறிவுறுத்தலின்படி, பேராவூரணி உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினர் நேற்று பேராவூரணியில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகங்களில் சமையலறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, இது தொடர்பாக 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.