திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்

Update: 2023-09-23 18:45 GMT

இளையான்குடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா திட்ட பணிகள் குறித்தும், பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல் முறையீட்டு மனுக்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட கீழாயூர் ஊருணி மூலதன மானிய நிதி திட்ட மேம்பாட்டு பணிகள், ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் மேல்முறையீட்டு மனுக்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆர்.டி.ஓ. சுகிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், தாசில்தார் கோபிநாத், பேரூராட்சி உதவி பொறியாளர் சந்திரமோகன், கவுன்சிலர் ஷேக் அப்துல் ஹமீது மற்றும் ஊராட்சி, ஒன்றிய, பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்