விருத்தாசலம், திட்டக்குடி பகுதி போலீஸ் வாகனங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
விருத்தாசலம், திட்டக்குடி பகுதி போலீஸ் வாகனங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட காவல்துறை வாகன பிரிவு சார்பில் நடந்த ஆய்வில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் கலந்து கொண்டு காவல்துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், வாகனங்களின் என்ஜின்கள் செயல்படும்விதம், எரிபொருள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள், காவல் துறை வாகன ஓட்டுனர்கள் உடனிருந்தனர்.