பழக்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் பழக்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை தொழிலாளர்துறை செயலாளர் அதுல்ஆனந்த் உத்தரவுப்படி திருச்சி கூடுதல் ஆணையர் ஜெயபாலன், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரையின்படி தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கமலா தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள பழக்கடைகள் மற்றும் இதர கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில் பொட்டலப்பொருள் விதிகளின் கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாத மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை குறிப்பிடாத நிறுவனங்களில் 6 முரண்பாடுகளும், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறுமுத்திரையிடாத மின்னணு தராசுகளை கண்டறிந்த நிறுவனங்களில் 6 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு, இணக்க கட்டணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.