கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஏலகிரி மலையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி ஏலகிரிமலையில் உள்ள பிரியாணி கடைகள் மற்றும் தங்கு விடுதியில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், 3 கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் 2 கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்து, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.