கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் ஆய்வு

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் ஆய்வு நடந்தது.

Update: 2022-09-07 18:14 GMT

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆண்டாய்வு மேற்கொண்டார். அப்போது, வளாகத்தின் சுற்றுப்புற தூய்மை, அலுவலக தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள், கணினி அறை, பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்