வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

சின்னசேலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Update: 2022-12-22 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டஅம்மையகரம் கிராமத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரம் குடியிருப்புகளில் பழுது நீக்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய்மீனா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தனிநபர் இல்ல குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்துக்கு சென்ற ஹர்சகாய்மீனா அங்கு வைத்திருந்த ஊட்டச்சத்து உணவை ருசி பார்த்து குழந்தைகளுக்கு வழங்கினார். முன்னதாக உலகங்காத்தான் கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தின் மூலம் கிராம மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு சேவைகளைப் பற்றி டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் ஹர்சகாய்மீனா கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், வருவாய் அலுவலர் சத்யநாராயணன், ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் பரந்தாமன், கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட திட்ட அலுவலர் செல்வி, தாசில்தார் இந்திரா, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா, வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், உதவி பொறியாளர் ராஜசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்