வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-25 18:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா, கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் அரியலூர், திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கொம்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இலையூரில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிவறை கட்டுமான பணியையும், மேலவெளியில் ரூ.4.74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உலர்களம் அமைத்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் த.கைக்களத்தெரு, கீழத்தெருவில் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை பணியினையும், த.வளவெட்டிக்குப்பத்தில் ரூ.5.43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினை பார்வையிட்டார். பின்னர் தத்தனூர் கால்நடை மருத்துவமனையினையும், தத்தனூர் சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்