கம்மாபுரம் அருகே தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணி அதிகாரி ஆய்வு

கம்மாபுரம் அருகே தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணியை அதிகாரி ஆய்வு செய்தாா்.

Update: 2023-01-16 18:45 GMT

கம்மாபுரம், 

கம்மாபுரம் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கொள்ளிருப்பு ஊராட்சியில் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிவிட்டு, விளை நிலங்களாக மாற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரத்னா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், துணை வேளாண் அலுவலர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் வீரசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் திருமாவளவன், உதவி வேளாண் அலுவலர் கலைச்செல்வி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்