கட்டுமான பணிகளை செயற்பொறியாளர் ஆய்வு
திருவெண்காடு சுகாதார நிலையத்தில் கட்டுமான பணிகளை செயற்பொறியாளர் ஆய்வு
திருவெண்காடு:
திருவெண்காடு அரசு சுகாதார நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள் அறை, நோயாளிகள் சிகிச்சை அறைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட பொதுப்பணித்துறை (கட்டுமானம்) செயற்பொறியாளர் பால ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ஜான்டிரோஸ், பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் ஒப்பந்ததாரர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.