தென்னந்தோப்புகளை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
தென்னந்தோப்புகளை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7,300 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள் பற்றி முதுகாடு, ஆவுடையானிக்கோட்டை கிராமங்களிலும் மற்றும் ஏனைய சுற்று வட்டார பகுதிகளில் தென்னந்தோப்புகளை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் கள அலுவலர் முருகானந்தம், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் பேசினர். இதில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.