1,060 மின் இணைப்புகள் ஆய்வு
தஞ்சையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை: 1,060 மின் இணைப்புகள் ஆய்வு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகரிய கோட்டம் அரண்மனை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கோட்ட அளவிலான கூட்டாய்வு நடைபெற்றத. இதில் 1,060 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 2 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான அபராததொகை ரூ.6 ஆயிரத்து 862 வசூலிக்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், வணிக ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.