பெரியகுளம் மாந்தோப்புகளில் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

பெரியகுளம் பகுதியில் உள்ள மாந்தோப்புகளில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-28 20:30 GMT

பெரியகுளம் பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி நடக்கிறது. தற்போது இப்பகுதிகளில் மாமரங்களில் பூ பூத்து, பிஞ்சு அரும்பி உள்ளதால் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு பூச்சி நோய் தாக்குதலும் உள்ளது.

இந்தநிலையில், பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேனி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) ஆறுமுகம் அறிவுரையின்பேரில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் முத்தையா, துணை பேராசிரியர் கல்பானா ஆகியோரை கொண்ட குழுவினர் பெரியகுளம் பகுதியில் உள்ள மாந்தோப்புகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது பூ பூத்து, காய்க்கும் தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்