நடுவட்டம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நடுவட்டம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துறை அரசு சிறப்பு செயலாளர் டி.என்.வெங்கடேஷ் கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் நேற்று மாலை ஆய்வு நடத்தினார்.
அப்போது இந்திரா நகர் பகுதியில் அபாயகரமான மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் அகற்றப்பட்டதையும், டி ஆர் பஜார் பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் 400 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து நடுவட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளையும், தற்காலிக நிவாரண முகாமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தங்கும் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊட்டி ஆர்.டி.ஓ துரைசாமி, தாசில்தார் சரவணகுமார், நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.