பொதுசுகாதார அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பொதுசுகாதார அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-24 12:17 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொது சுகாதார கோட்ட அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை பெறும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஒருவர் எத்தனை வீடுகளில் குப்பைகள் பெறுகின்றார்? என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் லூர்தூசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்