சோதனைச் சாவடி மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வாணியம்பாடி - செட்டியப்பனூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.;

Update:2023-06-16 00:15 IST

வாணியம்பாடி - செட்டியப்பனூர் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை கருத்தில் கொண்டு தடையில்லா பொது போக்குவரத்தை உறுதி செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் கூட்டுச்சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பத்தூர் நகருக்குள் வர கலெக்டர் உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி உள்ளே வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்