கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
ரெட்டிச்சாவடி பகுதி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ரெட்டிச்சாவடி
சென்னையில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் சுப்பையன் கடலூர் மாவட்டத்திற்கு வந்தாா். அப்போது மாவட்டத்தின் எல்லையான ரெட்டிச்சாவடி பகுதியில் உள்ள நல்லாத்தூர், இரண்டாயிரம் வளாகம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு திட்டங்களான விவசாய கடன், நகைக்கடன், தானிய கிடங்கு, உரக்கிடங்கு, நெல் அறுவடை எந்திரம், பொது சேவை மையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப் குமார், துணைப்பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.