கல்லாலங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

கல்லாலங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-14 12:54 GMT

சோளிங்கர்

கல்லாலங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கல்லாலங்குப்பம் கிராமத்தில், மாதிரி கிராமத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ராஜஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சுகாதார பணிகள், மண்புழு உரம், பொது சுகாதார கழிவறை, திட மற்றும் திரவ கழிவு முறையாக செயல்படுகிறதா? மற்றும் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வாழ்வாதார இயக்கம் மேலாளர் அலமேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்