கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு பதிவேடுகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு பரிசு

கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு பதிவேடுகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கினார்;

Update:2023-06-14 01:17 IST

மேட்டூர் 

கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார். அப்போது பதிவேடுகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேட்டூர்

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டத்துக்கு உட்பட்ட கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலைய சுற்றுப்புறம், பதிவேடுகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

அப்போது பதிவேடுகளை சிறப்பாக பராமரித்த போலீஸ் நிலைய அதிகாரிகளை பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

கலந்துரையாடல்

தொடர்ந்து மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். அங்கு காவலர் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக வந்து இருந்த 480 ஆண் காவலர்களுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடினார். அப்போது அவர், காவல்துறையில் உள்ள பணிகள் குறித்தும், பயிற்சி காவலர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பேசினார். தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கு உணவு சமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவலர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. (பொறுப்பு) விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி சூப்பிரண்டு சந்திரமவுலி ஆகியோர் உடன் இருந்தனர்.ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் துணை சூப்பிரண்டு நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜசேகர் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேச்சேரி

மேச்சேரி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை சிறப்பாக பராமரித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனை பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினார். மேலும் போலீஸ் நிலையத்தை சுத்தமாக பராமரித்து வரும் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்