தர்மபுரி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தர்மபுரியில் இருந்து மொரப்பூர் வழியாக அரூர் வரை உள்ள சாலையை இருவழி தடத்தில் இருந்து 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மற்றும் பாலங்கள், சாலையின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் டெண்டரில் குறிப்பிட்டபடி நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்தார். சாலையின் நீளம், அகலம், கனம், சரிவு, மட்டம் மற்றும் தரத்தை ஆய்வு செய்ததோடு, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாகவும், விரைவாகவும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி, உதவி பொறியாளர் இனியன் ஆகியோர் உடன் இருந்தனர்.