அரசு பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு
செந்துறை அருகே மலைக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
நத்தம் தாலுகா செந்துறை அருகே கரந்தமலை பகுதியில் உள்ள பெரியமலையூர் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னமலையூர் அரசு தொடக்கப்பள்ளி, வலசை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த 3 பள்ளிகளையும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தமிழ், ஆங்கில பாடங்களில் வாசிப்புத்திறன், கணித பயிற்சி குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடுகளையும் அவர் சோதனை செய்தார். மேலும் வருகிற கல்வியாண்டில் மாணவ, மாணவிகளை அதிகம் சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு பேச்சு திறனை வளர்க்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆய்வின்போது நத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, எஸ்தர் ராஜம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.