போதமலை, கெடமலைக்கு தார்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு சரிபார்க்கும் பணி-ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்

Update: 2023-04-15 18:45 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடுகம் போதமலை அடிவாரத்தில் இருந்து கீழூர் வழியாகவும், புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கும் 20 அடி அகலத்தில் வனப்பகுதி வழியாக தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தார்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு சரி பார்க்கும் பணி தொடங்கியது. இந்த பணியை ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழூர் மற்றும் கெடமலை பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.எம்.துரைசாமி, ஊரக வளர்ச்சி துறை தலைமை பொறியாளர் குற்றால லிங்கம், மாவட்ட ஊரக திட்ட இயக்குனர் சிவகுமார், செயற்பொறியாளர் மணி, உதவி செயற்பொறியாளர்கள் பார்த்திபன், பாலசுப்பிரமணியம், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், நாகலிங்கம், ஒன்றிய பொறியாளர்கள் பூபதி, கவுரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்